‘தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2026′, தைப்பொங்கல், இயற்கை மற்றும் பல்லினக் கலாசாரங்களைக் கொண்டாட விக்டோரியா வாழ் தமிழ் ஆஸ்திரேலியர்களை ஓரிடத்தில் இணைக்கின்ற ஒரு நிகழ்வாக அமைகின்றது.
2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு, இன்று தமிழ் ஆஸ்திரேலியர்களின் உயிர்ப்பான இருப்பை பிரதிபலிக்கின்ற தனித்துவமான ஒன்றுபட்ட முகமாக உருவெடுத்து, சுமார் 10,000 மக்களை ஈர்க்கின்ற முழுக் குடும்பத்திற்கும் நாள் முழுவதும் களிப்புத் தருகின்ற விக்டோரியாவின் மாபெரும் பல்கலாச்சார கொண்டாட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இருபது தமிழ் சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சியாக அமைகின்ற இந்த நிகழ்வு , விக்டோரியாவின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள தமிழ் ஆஸ்திரேலியர்களை ஒன்றிணைத்து பொங்கல் பண்டிகையை பலவகையான கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், உணவு மற்றும் பிற அங்காடிகள் , சிறுவர் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற போன்றவற்றுடன் கொண்டாடுவதுடன், எம் கலை,கலாசாரச் செழிப்பை மற்றைய சமூகங்களோடு பகிருகின்ற, எம் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. மேலும் இந்த கொண்டாட்டம், பல்லினக் கலாசார சமூகங்களுக்கிடையே, கலைகள் மற்றும் கலாசசாரத்தின் பொதுவான கூறுகளான இயற்கையை மதித்தல், அறுவடையைக் கொண்டாடுதல் போன்றவற்றின் மூலம் புரிந்துணர்வை வளர்க்க முனைகின்றது.
“The Tamil Festival Australia 2026 (TF2026)” is a vibrant celebration of Thai Pongal, nature, and cultural diversity. Since its inception in 2010, the festival has grown into a unifying and distinctive representation of Tamil Australians, becoming one of Victoria’s most prominent multicultural events. Each year, it attracts around 8,000-10,000 attendees and offers a full day of family-friendly entertainment.
TF2026 is the result of collaboration among 20 Tamil community organisations, bringing together Tamil Australians from across Victoria to celebrate Thai Pongal. The event features a rich mix of cultural performances, traditional sports, food stalls, and engaging activities for children—highlighting the community’s commitment to sharing its artistic heritage with the wider public. Beyond showcasing Tamil culture, the festival also fosters connections between diverse communities through arts and shared values, including reverence for nature and the joy of the harvest.
Guidance
High-Level Timelines for Tamil Festival 2026
# | Date | Activity |
1 | 07/10/2025 | Expression of Interest form released to the public. |
2 | 15/11/2025 | Registration closed |
3 | 30/12/2025 | Full performance video sample sent to the event committee. |
4 | 11/01/2026 | Rehearsal 1 (if required) |
7 | 18/01/2026 | Full Dress Rehearsal |
8 | 25/01/2026 | TF2026 performance |
Please note the dates above are indicative and may change. TF2026 will notify any changes on its website and individually to performers who have signed up.
Communications
All communication regarding the TF2026 performances should be sent to programs@tamilfestival.org.au We will endeavor to reply within 48 hours to your emails.
நோக்கங்கள்
Objectives of “The Tamil Festival Australia 2026”